உள்ளூராட்சி தேர்தலுக்காக பள்ளிவாசல்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பள்ளிவாசல்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தல் தொடர்பான விடயங்களுக்கு பள்ளிவாசலையோ, அதன் சூற்றுச்சூழலையோ அல்லது அதன் உடைமைகளையோ பயன்படுத்துவதை தவிர்த்துகொள்ளுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பள்ளிவாசலையோ, பள்ளிவாசல் சுற்றுச் சூழலையோ அல்லது அதன் உடமைகனையோ மற்றும் நம்பிக்கையாளர் பதவிகளையோ துஷ்பிரயோகம் செய்வது உறுதிப்படுத்தப்படாமல் வக்பு சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்,
பள்ளிவாசல் நிர்வாகிகள் பள்ளிவாசலையும் தங்களது பதவிகளையும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக துஷ்பிரயோகம் செய்வதாக வக்பு சபைக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கும் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்தே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸினால் மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)