இராஜதந்திர கிரிக்கெட் சுற்றுப் போட்டி
இராஜதந்திர கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்று கடந்த சனிக்கிழமை (27) இராஜரியவில் இடம்பெற்றது.
பாகிஸ்தான் தேசிய தினத்தினையொட்டி கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், இந்த சுற்றுப் போட்டியினை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் உயர் ஸ்தானிகராலயங்கள், தூதுவராலயங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்றன. 5 ஓவர்கள் கொண்ட இப்போட்டித் தொடரின் சம்பியனாக சர்வதேச செஞ்சிலுவை சங்க அணி தெரிவுசெய்யப்பட்டது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மது சாத் கட்டாக் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்த கிரிக்கெட் தொடரில் உள்ளூர் வர்த்தக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்கிய அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் பங்குபற்றினர்.
Comments (0)
Facebook Comments (0)