14வது தடவையாக இலங்கையின் மிகவும் நம்பிக்கையைப் பெற்ற சீமெந்து வர்த்தக நாமமாக INSEE வெற்றி

14வது தடவையாக இலங்கையின் மிகவும் நம்பிக்கையைப்  பெற்ற சீமெந்து வர்த்தக நாமமாக INSEE வெற்றி

INSEE சன்ஸ்தா சீமெந்து பெருமைக்குரிய SLIM Kantar People's விருது விழாவில் '2025ஆம் ஆண்டின் மக்களின் வீடமைப்பு மற்றும் கட்டுமான வர்த்தகநாமமாக' மீண்டும் ஒருமுறை முடிசூடியது. 

இது தொடர்ச்சியாகப் 14வது தடவையாகக் கிடைத்த ஒப்பிடமுடியாத வெற்றியாகும். கட்டுமானத் தொழில்துறையில் இலங்கையின் மிகவும் நம்பிக்கையைப் பெற்ற சீமெந்து வர்த்தகாமம் என்ற INSEE சன்ஸ்தாவின் நிலையை இந்த வெற்றி மீண்டும் மீள் உறுதிப்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதிலும் உள்ள கட்டுமானக்காரர்கள், ஒப்பந்தகாரர்கள், மேசன்கள், பொறியியலாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் காணப்படும் நேர்மையான விருப்பத் தெரிவு இலங்கையின் முன்னணியான நுகர்வோர் தெரிவு விருதில் தொடர்ச்சியாகக் கிடைத்துவரும் அங்கீகாரத்தின் மூலம் பிரதிபலிக்கப்படுகின்றது. 

இந்தப் பிரிவில் INSEE சன்ஸ்தா தொடர்ந்து செலுத்திவரும் ஆதிக்கமனது, முழு கட்டுமானத் துறையிலும் அதன் நீடித்த தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. தரம், புதுமை மற்றும் நிலையான கட்டுமானத் தீர்வுகளில் மூலம் தொழில்துறையை INSEE வழிநடத்தி வருவதால், SLIM Kantar People's விருதில் தொடர்ச்சியாக 14வது தடவையும் கிடைத்த வரலாற்று விருதானது தொழில்நுட்ப சிறப்பையும் சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தையும் வெற்றிகரமாக இணைத்து, மறுக்கமுடியாத சந்தைத் தலைவராக வர்த்தநாமத்தின் அந்தஸ்தை வலுப்படுத்துகின்றது.

INSEE சீமெந்தின் வணிகப் பணிப்பாளர் சஃபீக்ஹான் சித்தீக் குறிப்பிடுகையில், 

"சீமெந்தின் மீது இலங்கையர்கள் தொடர்ச்சியாக வைத்திருக்கும் நம்பிக்கை எமக்கு சிறந்த கௌரவத்தை அளிக்கின்றது. நிலையான கட்டுமான நடைமுறைகள் மற்றும் முன்னோடி முயற்சிகளில் கவனம் செலுத்தும் அதே வேளையில், தயாரிப்பு வழங்கல்களை மேலும் மேம்படுத்த இந்த அங்கீகாரம், எங்களுக்கு ஊக்கத்தை அளிக்கின்றது. 

தொடர்ச்சியாக 14வது தடவையும் கிடைத்த வெற்றியானது INSEE சன்ஸ்தா சீமெந்து சந்தையில் கொண்டிருக்கும் தலைமைத்துவம் மற்றும் சிறப்புக்காக வர்த்தகநாமம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பின் பலத்தை உறுதிப்படுத்துவதாக அமைகின்றது" என்றார்.

இலங்கையில் 50 வருடத்திற்கும் மேலான வர்த்தகநாம பாரம்பரியத்துடன், ஐNளுநுநு சன்ஸ்தா தொழில்துறையில் முன்னோடியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. பல்வேறு கட்டுமானப் பயன்பாடுகளுக்கு மேம்பட்ட நிலைத்தன்மை, வலிமை மற்றும் செயல்திறனை வழங்கும் போர்ட்லேண்ட் கலப்பு சீமெந்தை இலங்கையில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமையும் இந்நிறுவனத்தைச் சாரும். 

இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சீமெந்துத் தொழிற்சாலையைக் கொண்டுள்ள ஒரேயொரு தயாரிப்பாளர் என்ற ரீதியில் INSEE நிறுவனம், உற்பத்திச் செயற்பாடு முழுவதிலும் கடுமையான தரக் கட்டுப்பாட்டைப் பேணி வருகின்றது. 

நிலைப்புத் தன்மையை நோக்கிய பயணத்தில் முன்னிலை வகிக்கும் இந்நிறுவனம், தனது முழுமையான தயாரிப்புக்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரகடனத்தைப் பெற்ற முதலாவது சீமெந்து நிறுவனமாக அமைவதுடன், இலங்கையிலுள்ள பசுமைக் கட்டட கவுன்சிலிடமிருந்து 2024ஆம் ஆண்டு பெருமைக்குரிய 5 நட்சத்திர பசுமை சான்றிதழைப் பெற்ற ஒரேயொரு நிறுவனமாகவும் காணப்படுகின்றது.

INSEE நிறுவனத்தின் முன்னணியான போர்ட்லேண்ட் கலப்பு சீமெந்துத் தயாரிப்பானது, போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த காபன் வெளியேற்றத்தைக் கொண்டதாகவும், பல்வேறு கட்டுமானத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் ஒரு தயாரிப்பதாகவும் அமைந்துள்ளது. 

கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் இலங்கை முழுவதிலும் எதிர்காலத்திற்குத் தயாரான கட்டுமானங்களை மேற்கொள்வது என்ற INSEE நிறுவனத்தின் நோக்கத்துடன் ஒருங்கிணையும் வகையில் இது அமைந்துள்ளது. 

செயல்திறன், சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் 05 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை நுகர்வோரின் அபரிமிதமான நம்பிக்கையைக் கொண்ட வர்த்தக நாமத்தில் முதலீடு செய்வதானாலேயே கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு, INSEE சன்ஸ்தாவைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.