பாடகி யோஹானியினை வரவேற்றக லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டனரா?
சர்வதேச இசை அரங்கில் தற்போது அதிகம் பேசப்படும் இலங்கை பாடகியான யோஹானி டி சில்வாவின் இந்திய சுற்றுப் பயணம் தொடர்பில் இன்று (01) வெள்ளிக்கிழமை வெளியான லங்காதீப பத்திரிகையின் முன்பக்க படம் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சியொன்றிற்காக தற்போது புதுடில்லி பயணித்துள்ள யோஹானியை வரவேற்பதற்காக, பல லட்சக் கணக்கான மக்கள் ஒன்று திரண்டதாக குறித்த புகைப்படத்துடனான செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறு பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்ட புகைப்படமொன்றும் ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் லங்காதீப பத்திரிகையும் குறித்த படத்தினை முன்பக்கத்தில் பிரசுரித்திருந்தது.
எனினும், யோஹானியை வரவேற்பதற்காக பெருந்திரளானோர் வருகைத் தரவில்லை என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த புகைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளியின் போது, அங்குள்ள விமான நிலையமொன்றில் மக்கள் ஒன்று கூடியிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படமொன தற்போது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, குறித்த புகைப்படத்தினை வெளியிட்டமைக்காக லங்காதீப பத்திரிகை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மன்னிப்புக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)