வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக விஷ் கோவிந்தசாமி தெரிவு
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 182ஆவது வருடாந்த பொது ஒன்றுகூடலின் போது
அதன் புதிய தலைவராக விஷ் கோவிந்தசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அமைப்பின் தலைவராக இரண்டு வருட காலம் செயலாற்றியிருந்த கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியவின் பதவிக் காலம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து, அந்த நிலைக்கு கோவிந்தசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளராக கோவிந்தசாமி செயலாற்றுவதுடன், வட்டவளை பிளான்டேஷன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் செயலாற்றியிருந்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவராக ஏர்னஸ்ட் அன்ட் யங் சிரேஷ்ட பங்காளரும் வரிப் பிரிவின் தலைமை அதிகாரியுமான துமிந்த ஹுலன்கமுவ நியமிக்கப்பட்டதுடன், பிரதி உப தலைவராக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தவிசாளர் கிரிஷான் பாலேந்திரா நியமிக்கப்பட்டார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களாக ஜெட்விங் ட்ராவல்ஸ் தலைமை அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளரும், ஜெட்விங் ஹோட்டல்ஸ் தலைமை அதிகாரி ஷிரோமால் கூரே, காகில்ஸ் ஃபுட் கம்பனி முகாமைத்துவ பணிப்பாளரும், காகில்ஸ் (சிலோன்) பணிப்பாளருமான அசோக பீரிஸ், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஞ்சுள டி சில்வா ஆகியோர் மீளத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
ஹேலீஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சரத் கனேகொட, லயன் பிரெவரி சிலோன் தவிசாளரும் சிலோன் பெவரேஜ் ஹோல்டிங்ஸ் தவிசாளருமான அமல் கப்ரால், ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி பிரதம நிறைவேற்று அதிகாரி பிங்குமல் தேவதந்திரி ஆகியோர் பணிப்பாளர் சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
Comments (0)
Facebook Comments (0)