ஒக்டோபர் 11 இல் எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல்
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, எல்பிட்டி பிரதேச சபையின் தேர்தல் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தநிலையில் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
குறித்த வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டு தேர்தல் நடத்த கடந்த வாரம் உயர் நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 11ம் திகதி அங்கு தேர்தல் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
Comments (0)
Facebook Comments (0)