இலங்கையை நோக்கி ஈரானிய சுற்றுலாப் பயணிகளை நகர்த்த நடவடிக்கை

இலங்கையை நோக்கி ஈரானிய சுற்றுலாப் பயணிகளை நகர்த்த நடவடிக்கை

இலங்கையை நோக்கி ஈரானிய சுற்றுலாப் பயணிகளை நகர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் என்.எம். சஹீதினாலேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கினங்க ஈரானின் சுற்றுல்லா முகவர் மற்றும் விமானப் போக்குவரத்து சங்கத்தின் உதவி நிறைவேற்றுத் தலைவர் கலாநிதி மோர்டென்சா ஷபானி  கடந்த வாரம் இலங்கைக்கான விஜயமொன்றினை மேற்கொண்டார்.

ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் என்.எம். சஹீதின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விஜயத்தினை சுற்றுல்லா முதலீட்டு சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம். ஜௌபர் ஒருங்கிணைப்பு செய்தார்.

இதன்போது, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன, முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரகோன், சுற்றுல்லா அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவவாசம் உள்ளிட்டோரை கலாநிதி ஷபானி சந்தித்து பேச்சு நடத்தினார்.

இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுல்லா துறையினை விருத்தி செய்வது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் ஈரானிய சுற்றுல்லா பயணிகளுக்கு இலங்கையின் சுற்றுல்லா தளங்களை பிரல்பயப்படுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்காக ஈரானுக்கு விஜயம் செய்யுமாறு சுற்றுல்லா அதிகார சபையின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதேவேளை, ஈரானிய சுற்றுல்லா முகவர் மற்றும் விமானப் போக்குவரத்து சங்கத்தின் வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்துமாறு சுற்றுல்லா முதலீட்டு சம்மேளனத்தின் தலைவரினால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது.