முயற்சிக்கு கண் பார்வை தடையல்ல
றிப்தி அலி
'கண் பார்த்தால் கை வேலைசெய்யும்' என்பார்கள். இங்கே கண்; பார்க்காமலே ஒருவரின் கை வேலை செய்து கொண்டிருக்கிறது. அவர் கையால் பார்த்தே மின் உபகரணங்களை திருத்துகிறார்.
அவர் பெயர் எம். கலீலுர் ரஹ்மான். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேசத்தின் காவத்தமுனை கிராமத்தில் தற்போது வாழ்ந்து வருகின்ற இவர், கடந்த 16 வருடங்களாக மின் உபகரண திருத்துனராக செயற்படுகின்றார்.
இதற்கு முன்னர் சுமார் இரண்டு வருடங்கள் இவர் தச்சு தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக திருவுளை செய்தல், கோழிக் கூடு அடித்தல் போன்ற வேலைகளையும் இவர் செய்துள்ளார்.
எனினும், இந்த தொழிலில் ஆர்வமின்மையினால் இத்தொழிலை நிறுத்தி விட்டு மின் உபகரங்களை திருத்தும் வேலையில் ஆர்வம் கொண்டு அத்தொழிலை மேற்கொண்டு வருகின்றார்.
தற்போது கலீலுர் ரஹ்மானினால் கீட்டர், வோசிங்க் மெசின், ரைஸ் குக்கர் போன்ற பல மின் உபகரணங்களை பழுதுபார்க்க முடிகிறது. இவரால் எவ்வாறு இந்த வேலையை செய்யமுடிகிறது? என்பதை மிகவும் ஆச்சரியத்துடன் எம்மை திரும்பி பார்க்கவைத்தார்.
"நீங்கள் உங்கள் கண்களால் பொருட்களை பார்ப்பீர்கள். நான் என் கைகளால் தான் பொருட்களை பார்த்து உணருகிறேன். இந்த மின்விசிறிக்கு என்ன பிரச்சினை என்பதை கையினால் தொட்டுப் பார்ப்பதன் ஊடாக உணர்வேன்" என்றார் கலீலுர் ரஹ்மான்
"அவ்வாறு மின் விசிறிக்கு கொயில் சுட்டுபோச்சு என்பதனை உணர்ந்தால், அதனை கழற்றி கொயில் அடித்துக் கொடுப்பேன். அவ்வாறில்லாவிட்டால் நல்ல பாகங்களை கடையில் வாங்கி திருத்திக்கொடுத்துவிடுவேன்" என்று உற்சாகததுடன் கூறுகிறர் கலீலுர் றஹ்மான்
தனக்கு கண் பார்வை இல்லையே என்று தான் ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை என்கிறார் இவர். சமூகத்திலிருந்து ஒருபோதும் ஒதுக்கப்படாமையே இதற்கான பிரதான காரணமாகும். இவருக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர்.
"என்னை யாரும் ஒதுக்கவில்லை. சமூகம் நல்ல முறையில் என்னுடன் பழகின்றது எனவும் அவர் கூறினார். இவர், 1972.06.20ஆம் திகதி வாழைச்சேனை, பிறந்துரைச்சேனை கிராமத்தில் பிறந்துள்ளார். எட்டு பிள்ளைகளைக் கொண்ட பெற்றோருக்கு ஏழாவது பின்ளையாக பிறந்துள்ளார்.
நான்கு சகோதரிகளும் மூன்று சகோதரர்களையும் கொண்ட இவரின் மூன்றாவது வயதில் அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாவே கண் பார்வையினை இழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அம்மை நோயை குணப்படுத்த முட்டை எரிந்ததாகவும் அதிலிருந்து ஏழு நாட்களின் பின்னர் கண் தெரியாமல் போயிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இவரின் கண் நோயினை குணப்படுத்த மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.
கலீலுர் றஹ்மான், 1996ஆம் ஆண்டு தனது 25 வயதில் திருமணம் முடித்துள்ளார். இவருக்கு இரண்டு பிள்கைள் உள்ளனர். இவர்கள் இருவரும் குடும்பத் தொழிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
எனினும், சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதனால் தான் உழைக்க வேண்டும் என்ற முடிவில் களமிறங்கியுள்ளார் அஸீஸ். திருமணம் முடித்த பின்னர் தான் தொழில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கண் பார்வை இழந்தமையினால் கலீலூர் றஹ்மான் பெரியளவில் படிக்கவில்லை. இதற்கு பிரதான காரணம் அவருடைய ஊர் கிராமம் என்பதனால் அந்த வசதிகள் இல்லாமையினாலாகும்.
இதனால் தூர இடத்திற்கு சென்று கல்வி கற்க அவருடைய பெற்றோரும் அனுமதிக்கவில்லை. அங்கவீனர்களுக்கான பாடசாலைகள் இருக்கும் விடயமும் எனக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் நிச்சயம் போயிருப்பன் என்கிறார் அவர்.
எனினும், இன்றைய நவீன கால கட்டத்தில் விழிப்புலனற்றோருக்காக வேண்டி பல கல்வி திட்டங்களை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது. அது மாத்திரமல்லாமல், இவ்வாறனாவர்கள் பரீட்சைகளில் தோற்றுவதற்கும் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை வினைத்திறனாக பயன்படுத்தி பலர், பல்கலைக்கழக பட்டங்களைப் பெற்று அரச தொழிலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் எந்தவித கல்வியறிவுமற்ற நிலையில் மின் உபகரணங்களை கலீலுர் ரஹ்மான் திருத்துவதற்கு நண்பர் ஒருவரே கற்றுக்கொடுத்துள்ளார்.
எனினும் குறித்த நண்பனின் பெயரை குறிப்பிட அவர் மறுத்துவிட்டார். தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் அவரிடம் பயிற்சி பெற்றே இந்த தொழிலை கற்றுக்கொண்டதாக கூறும் அவர், தற்போது வரும் மின் உபகரணங்கள் தொடர்பில் ஏதுவும் ஆலோசனை தேவை என்றால் எனது சிரமம் பார்க்கமால் வீடு வந்து சொல்லித் தருவார் எனவும் கூறினார்.
இதனால் தெரியாத எல்லா விடயங்களையும் அவரிடம் கேட்டு படித்துகொள்வேன் என்றார் கலீலுர் ரஹ்மான். இந்த தொழில் மாத்திரமல்லாமல், கதவு லொக் செய்தல் போன்ற பல வேலைகளும் இவரால் சிறப்பாக மேற்கொள்ள முடியுகின்றது.
"என்னிடம் எந்த கணக்கும் யாரும் விட முடியாது. நான் அவர்களுக்கு சொல்விக்கொடுப்பேன்" என அவர் கூறிப்பிட்டா. இதேவேளை, தொழில் முயற்சியினை ஆரம்பிக்க விரும்பு இவருக்கு அரசாங்கத்தினாலோ அல்லது. அரச சார்ப்பற்ற அமைப்புக்களினாலே எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டார்.
கண் பார்வையற்றவர்கள் உள்ளிட்ட அங்கவீனர்களுக்கு மாதாந்தம் கொடுப்பணவு திட்டமொன்று மாத்திரமே அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றதே தவிர வேறு எந்த உதவித் திட்டங்களும் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாகவே கலீலுர் றஹ்மான் போன்ற பலர் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க கஷ்டப்படுகின்றனர்.
இதேவேளை, சில அரச சார்பற்ற நிறுவனங்களினால் விழிப்புணர்வற்றோர் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் குறித்த உதவித் திட்டங்கள் கலீலூர் றஹ்மான் போன்று கிராம பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு சென்றடைவதில்லை என்பது முக்கிய விடயமாகும்.
"எனக்கு மனம் திருப்தியில்லாமல் பொருட்களை கொடுக்கமாட்டேன். முனம் திருப்திக்கு செய்துகொடுப்போன். பொய்யுமில்லை, களவுமில்லை. நீதியும் நியாயமும். ஆதிக கட்டணம் வசூலிப்பதுமில்லை" என்றார் கலீலூர் றஹ்மான்.
இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இவரிடம் மின் உபகரணங்களை திருத்துவதற்காக வழங்கியவர்கள் எம்மிடம் தெரிவித்தனர். அது மாத்திரமல்லாமல் இவர் மிகவும் நம்பிக்கைக்குரியவர் என அக்கிராம மக்கள் எம்மிடம் தெரிவித்தனர். எனினும், வாழைச்சேனை பிரதேசத்தில் கடந்த பல தசாப்தங்களாக வசித்து வந்த இவர் தற்போது ஓட்டாமாவடி, காவத்தமுனை பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக வசித்து வருகின்றார்.
இப்பிரதேசத்திற்கு இவர் புதியவர் என்பதனால், இவருக்கான தொழில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் இவர் பல சிரமங்களை தற்போது எதிர்நோக்கியுள்ளனர்.
தற்போது வீட்டிலிருந்தே மின் உபகரணங்களை திருத்தும் பணியினை மேற்கொள்ளும் இவரின் நீண்ட நாள் ஆசையாக காணப்படுகின்றன விடயம் பிரதான நகரொன்றில் கடையொன்றினை திறப்பதாகும்.
கடையொன்று திறப்பதன் மூலம் அதிக வேலைகள் கிடைக்கப் பெற்று பலருக்கு தொழில் வாய்ப்பினை வழங்க முடியும் என இவர் நம்புகின்றார். எனினும் பணப் பற்றாக்குறை காரணமாக இதனை முன்னெடுக்க முடியாதுள்ளது. இதற்கு யாரும் உதவ முன்வரமாட்டார்களாக என்ற அங்காலாய்ப்பில் இவர் காணப்படுகின்றார்.
இதன் ஊடாக இவரின் தொழில் தூண்டுதலை நிச்சயம் மேற்கொள்ள தேவை. வீழ்ந்து கிடைக்கும் ஒருவரை எழப்பி விட வேண்டியது சமூகத்தின் பொறுப்பாகும். 'கம்பியூட்டர் போல நமது மூளைகள் இருக்க வேண்டும் கண் தெரியா என்றுவிட்டு ஒடுங்கி இருக்கக் கூடாது. அத்துடன் மன வெளிச்சம் உறுதியாக இருக்க வேண்டும். பார்வையில்லை என்று முடங்கி இருக்காமல் முயற்சி செய்ய வேண்டும் என தன்னைப் போன்று கண் பார்வையற்றிருப்பவர்களுக்கு இவர் ஆலோசனை வழங்குகின்றார்.
இவரை தொடர்புகொள்ள விரும்புகின்றவர்கள் 0752281398 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.
Comments (0)
Facebook Comments (0)