கல்முனை பெரிய பள்ளிவாசலுக்கு விரைவில் புதிய நிர்வாகம்
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை விரைவில் நியமிக்கப்படும் என வக்பு சபை இன்று (27) வியாழக்கிழமை அறிவித்தது.
கடந்த பல வருடங்களாக இப்பள்ளிவாசலுக்கான நிர்வாக சபை நியமிக்கப்படாமை தொடர்பில் வக்பு சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சபையின் சிரேஷ்ட உறுப்பினரொவருவர் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றினை தயாரிக்கும் பணியில் வக்பு சபை தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் மிக விரைவில் இப்பள்ளிவாசலுக்கான நிர்வாக சபை நியமிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பள்ளிவாசலின் நிர்வாகம் தொடர்பில் பேஸ்புகில் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் வக்பு சபையின் சிரேஷ்ட உறுப்பினரொவருவரை தொடர்புகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)